வவுனியாவில் இளைஞர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுதி

வவுனியா குருமன்காட்டில் 22 வயது பல்கலைக்கழக மாணவனுக்கு இன்று (20.12.2020) இரவு 8.20 மணியளவில் கொவிட்-19 தொற்றுஉறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 22 பல்கலைக்கழக வயதுடைய மாணவன் ஒருவர் திங்கட்கிழமை வெளிநாடு செல்லும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வருகை தந்து குருமன்காட்டிலிலுள்ள அவரது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

அதன் பின்னர் சனிக்கிழமை மாலை வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளார். வெளிநாடு செல்வதற்காக குறித்த மாணவனுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் குறித்த பி.சீ.ஆர் பிரசோனை முடிவுகள் இன்று (20.12.2020) இரவு 8.20 மணியளவில் வெளியானதில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர் வவுனியாவில் தங்கியிருந்த அவரின் நண்பர்களின் வீடு சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பல்லைக்கழக மாணவன் வவுனியாவில் நடமாடிய இடங்கள் தொடர்பிலான விசாரணைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
‘மாநகரம்’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி: அட இந்த கதாபாத்திரத்திலா நடிக்கிறாரு…