யாழ் மாவட்டத்தில் அதிகரித்த கொவிட்–19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

யாழ்  மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொவிட்–19 நோய்த் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய 2 பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொவிட்–19 வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனும் 40 வயதுடைய ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 120 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா நகரக் கடைகளுக்கு கடந்த 2 வாரங்களில் சென்றோரைத் தொடர்புகொள்ளக் கோரிக்கை!