இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (20.12.2020) மேலும் 715 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களில் 28,267 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.