முல்லைத்தீவு – நாகசோலை வனப்பகுதியில் அநுராதபுர யுகத்திற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா தொல்பொருள் ஆய்வுமையம் அகழ்வாராய்ச்சி நடத்தியதாக அறிவித்துள்ளது.
இதன்போது 78 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதாகவும் அந்த காலத்தில் குருந்த விகாரை என்ற பெயரில் அறியப்படும் இடத்தில் குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதையல் தோண்டுபவர்களால் இவ் இடத்தில் அகழ்வு நடந்து உள்ளதாக அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுர யுகத்தில் (கிபி 964-954) ஆட்சி செய்த நான்காம் உதயா மன்னருக்கு சொந்தமான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.