யாழ்ப்பாணத்தில் இன்று அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 478 பேருக்கு பி,சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவருக்கு கொவிட்-19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளதாக  யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

 

இதற்கமைய, யாழ்.இணுவில்-1, மானிப்பாய்-1, சண்டிலிப்பாய்-1 என மூவருக்குத் தொற்றுப் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பேருக்கும், கோப்பாய் கொவிட்-19 சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நடாத்தப்பட்ட பரிசோதனையில் சுன்னாகம் பொதுச்சந்தை வியாபாரிகள் இருவருக்கு இன்று கொவிட்-19  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன்மூலம் மருதனார்மடம் கொவிட்-19 வைரஸ் கொத்தணியின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா பாவற்குளத்தின் வான்கதவுகள் திறப்பு!