வவுனியாவில் தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்பவிழா!

ஜனாதிபதியின் சௌபாக்கிய கொள்கையின் அடிப்படையில் “குழந்தைகளிற்கான மரத்தோட்டம்” என்ற தொனிப்பொருளில் தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்பவிழா வவுனியா புதுக்குளம் கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் இன்று (15.02.2021) காலை 10மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டச்செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் மாமரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டதுடன், மாணவர்களிற்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதேசசபையின் தவிசாளர்களான ச.ஜெகதீஸ்வரன், ச.தணிகாசலம், வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார்,

மாவட்ட விவசாய பணிப்பாளர் பி.ஈஸ்வரன், பாடசாலை அதிபர் கமலாம்பிகை, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை