சிறைச்சாலைக்குள் தூக்கி வீசப்பட்ட மர்ம பொதி!

களுத்துறை சிறைச்சாலைக்குள் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் அடங்கிய பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சிறைச்சாலை கூரை மீது எறிந்து, அவற்றை உள்ளே கடத்தும் திட்டத்துடன் வைத்திருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பொதியை வைத்திருந்த நபர் அடையாளம் காணப்படவில்லை. அவரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதியில் இருந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகள், 45 கிராம் நிறையுடைய க.ஞ்.சா, தொலைபேசி சார்ஜர், புகையிலை மற்றும் 5 கிராம் நிறையுடைய ஐஸ் போ.தை.ப்பொருள் என்பன மீ.ட்கப்பட்டுள்ளன.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கை கிரிக்கெட் அணியில் மேலும் இருவருக்கு கொவிட்-19 தொற்று!