வவனியா, ஓமந்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிள், பட்டாரக வாகன விபத்தில் இருவர் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமந்தை, பன்றிகெய்தகுளம் ஏ9 பிரதான வதியில் இன்று இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பன்றிகெய்தகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்தநிலையில், ஓமந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.