சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி தடம்புரள்வு!

சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி  ஒன்று  ஏ9 வீதியில் பனிக்கன் குளம் பகுதியில் இன்று அதிகாலை தடம் புரண்டு  விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்து ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று மாங்குளம், பனிக்கன்ளம் ஏ9 ல் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகித் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன் போது குறித்த பாரவூர்தியில் பயணித்த அதன் நடத்துநர் காயமைடந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் விசாரகணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழில் ஒரேநாளில் இத்தனை பேருக்கு கொவிட்-19 தொற்றா!… : ஒரே குடும்பத்தில் மூவருக்கும் தொற்று!