‘140 நாட்கள்’… ‘உலக அமைதிக்காக தொடர் ஓட்டம்’… வியக்கவைத்த உலக சாதனை!

உலக அமைதி வேண்டி ராஜஸ்தானைச் சேர்ந்த சுபியா என்ற 33 வயது பெண் எடுத்துள்ள முயற்சி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்த தடகள வீராங்கனை சுபியா இந்திய விமானத் துறையில் ஊழியராக பணிபுரிகிறார். இவர் உலக அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தியும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்குத் தொடர் ஓட்டப்பயணம் ஓடி சாதனை படைத்துள்ளார்.

கடந்த சித்திரை மாதம் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து தேசியக் கொடியை ஏந்தியவாறு தனது ஓட்டத்தைத் தொடங்கினார்.

தினமும் 50 கிலோ மீட்டர் வீதம் 14 மாநிலங்களைச் சேர்ந்த கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகள் வழியாக 100 நாட்களுக்குள் 4,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கன்னியாகுமரியை அடைய அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே 90 நாட்களுக்குள் 4,035 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி கடந்துள்ளார்.

இதனிடையே  சுபியாவை போல் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த எந்த பெண்ணும் இவ்வளவு நீண்ட தூரத் தொடர் ஓட்டத்தை மேற்கொள்ளாத நிலையில், அவரது சாதனை தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதனிடையே  அடுத்தகட்டமாக 6000 கிலோமீட்டரை 140 நாட்களில் ஓடிக் கடக்கத் திட்டமிட்ட சுபியா, டெல்லியிலிருந்து கடந்த மார்கழி 16ம் தேதி தனது ஓட்டத்தைத் தொடங்கினார்.

இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் சென்னையை வந்தடைந்தார். அமைதியையும், அன்பையும் பரப்பவே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாகக் கூறியுள்ள சுபியா சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு உதாரணம் தான்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் வயல் நிலங்களை நாசம் செய்த யானைகள் : கண்ணீரில் விவசாயி