‘முகம் கோல்டன் நிறத்தில மாறும்னு நெனச்சு தேய்ச்சேன்’!… கடைசியில் நடந்த அ.திர்ச்சி…!  

அழகுக்காக மஞ்சள் கலந்த முகப்பூச்சை தொடர்ந்து பயன்படுத்தி வந்த பெண்ணின் முகம் மஞ்சள் நிறமாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த டிக்டாக் பிரபலமான Lauren Rennie, தனது முகம் கோல்டன் நிறத்தில் பளீச்சென்று காட்சியளிக்கவும், முகத்திலுள்ள வெடிப்பை போக்கவும், மஞ்சள், தேன், பாதாம் எண்ணெய், கடலை மாவு, பிரஸ் கிரீம் உள்ளிட்டவை கலந்த பேஸ்ட்டை தினமும் முகத்தில் தேய்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது முகம் மஞ்சள் நிறமாக மாறியதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தனது டிக்டாக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்த Lauren Rene, ‘வீட்டு சமையலறையில் இருந்த பொருட்களை வைத்து தயாரித்த இந்த முகப் பேஸ்ட்டால் என் முகப்பரு, சுருக்கங்கள், தோல் எரிச்சல் போன்றவை நீங்கி நன்மை கிடைத்துள்ளது. ஆனால் முகமூடி போட்டதுபோல் உள்ள மஞ்சள் நிறத்தை போக்க வழிகளை தேடி வருகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கனரக இயந்திரம் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி