‘அம்மாவுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை’…  ஸ்மார்ட்டா யோசித்து அசத்திய இளைஞர்… : தற்பொழுது ஒரு ஊருக்கே உபயோகப்படும் விடயம்!

இந்த உலகத்தில் தாயை விடப் பெரிய சக்தி ஒண்ணும் இல்லை’ என்ற வசனத்திற்கு ஏற்ப தனது தாய்க்காக இளைஞர் செய்த செயல் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல நிறுவனமான Airbnbயில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருபவர் Huge Ma. இவர் தனது தாய்க்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வந்துள்ளார்.

அமெரிக்காவில் தடுப்பூசி போட இணையத்தில் முன்னரே அப்பாயின்மென்ட் பெறுவது கட்டாயமாகும். அதற்காக அவர் அரசு இணையத்தளத்தில் அப்பாயின்மென்ட் பெற முயற்சி செய்த நிலையில், அரசு போர்ட்டல்கள் சரியாக வேலை செய்யாமல் இருந்துள்ளது.

மேலும் பல வலைத்தளங்கள் இருந்த நிலையில், புதிதாக Sign-Up செய்ய வேண்டும் எனப் பல பக்கங்களுக்குச் சென்று கொண்டிருந்தது. இது Huge Maக்கு கடும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து முயற்சி செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது.

ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன Huge Ma, அம்மாவுக்குக் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவரை வேறு விதமாகச் சிந்திக்க வைத்தது.

தன்னை போன்று எவ்வளவு பேர் இதுபோல கஷ்டப்படுவார்கள் என நினைத்த Huge Ma, ஏன் நாமே ஒரு இலவச இணையதளத்தை உருவாக்கக் கூடாது என எண்ணிய Huge Ma, அதோடு நிறுத்தாமல் உடனே அதற்காக பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

அதன் பயனாக நியூயார்க்கில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ”Turbovax” என்ற இலவச இணையதளத்தை Huge Ma உருவாக்கியுள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இணையதளத்தை உருவாக்க அவருக்கு வெறும் 50 டொலர்கள் மட்டுமே செலவான நிலையில், அதை இரண்டே வாரத்தில் உருவாக்கி அசத்தியுள்ளார் Huge Ma.

தற்போது நியூயார்க் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு இந்த இணையதளம் பெரும் உதவியாக உள்ளது.

அதோடு ட்விட்டரில் அப்பாயின்மென்ட் குறித்த லைவ் அப்டேட்களும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தனது தாய் மீது இருந்த அன்பின் காரணமாக இளைஞர் உருவாக்கிய இணையத்தளம் தற்போது பெருவாரியான மக்களுக்கும் பயன்படுகிறது எனப் பலரும் Huge Maவை பாராட்டி வருகிறார்கள்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள்