பதுளையில் சமூகமயமடைந்த கொவிட்-19 வைரஸ் : தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

பதுளையில் பாரியளவில் கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

பதுளை, ரிதீமாலியத்த கெமுனுபுர தொழிற்சலையில் 2300 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் மேலும் 202 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டுப்படுத்த முடியாத அளவில் பதுளை மாவட்டத்தினுள் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய இதுவரையில் அந்த தொழிற்சாலையில் 597 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.

இதற்கு மேலதிகமாக தொற்றாளர்களுடன் நெருங்கி செயற்பட்ட குடும்பத்தினர் 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மஹியங்கனை ஆடை தொழிற்சாலை ஒன்றில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 115 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“பதுளை மாவட்டத்தினுள் கொரோனா தொற்றாளர்கள் சமூக பரவலாக அடையாளம் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எப்படியெல்லாம் தரவுகளை மறைத்தாலும் சுகாதார கட்டமைப்பு தனது எல்லையை நெருங்கியுள்ளது.

சுகாதார ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படும்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
“நிச்சயம் இது ‘அது’ தான்…!” ‘பயங்கர’ காட்சியை கண்டு அலறிய பெண்… அவசர அவசரமாக ‘மோப்ப நாயுடன்’ வந்த காவல்துறை… அதிர்ச்சியை கொடுத்த ‘அதிரடி’ திருப்பம்!