பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து அமெரிக்க தூதுவர் கருத்து!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை தமக்கு ஆச்சரியமளித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை நியாயமாக அக்கறையுடன் அணுக வேண்டும்.

இந்தப் போராட்டம் தொடர்பில் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டதை பார்த்தேன்.ஆனால் கொழும்பை தளமாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன்.

அமைதிவழிப்போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும்.இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்கவேண்டும்.அவர்களின் கவலைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
காவல்துறையினர் பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!