உலகில் அதிகளவில் விஷத்தை உண்ணும் நாடு இலங்கை மக்கள்!… காரணம் என்ன?

உலகில் அதிகளவில் விஷத்தை உண்ணும் நாடு இலங்கையே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர்.

இவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் 2010 ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம்.

நாடாளுமன்றம் உங்களின் கைகளில் உள்ளது. விஷம் சேர்க்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்”. என அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
யாழ் ஏ-9 வீதியில் நடந்த கோர வி.பத்து! ம.யிரிழையில் உயிர் தப்பிய தாயும் பிள்ளையும்…