வவுனியா சிறைச்சாலையில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பை சேர்ந்த குறித்த நபர் கடந்த 31 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அப் பரிசோதனை முடிவுகள் இன்று (08.02) கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த கைதிக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கைதியை கொரோனா வைத்தியசாலைக்கு அனுபுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார துறையினர், குறித்த கைதியுடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் முதல் கொவிட்-19 தடுப்பூசி யாருக்கு போடப்படும் தெரியுமா? வெளிவந்த புதிய தகவல்