ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று! : அதிகாரிகளின் செயலினால் பதற்றமடைந்த பணியாளர்கள்!

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் இரண்டு தனியார் ஆடைதொழிற்சாலைகளில் சுமார் 1000 மேற்ப்ட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டுள்ளது.

அவர்களுடன் பணியபற்றிய ஏனைய ஊழியர்கள் இன்று கடமைக்கு சென்ற நிலையில் அவர்கள் தமது அச்சத்தினை தமது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடர்ந்தும் சேவையாற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் அங்கு அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அங்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த நிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து பலரும் தொழிலின் நிமித்தம் செல்கின்றனர்.

இதனால் மாவட்டத்தின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு தொழிற்சாலை நிர்வாகம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை பொது அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு வெளி மாவட்டங்களிலிருந்து உயர் பதவிநிலை ஊழியர்கள் வருகை தருவதால் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் பொது அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதற்கு அமைவாக சம்மந்தப்பட்டவர்களு்ம, சுகாதார துறையினரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் நாட்டுக்கு கிடைத்துள்ள இலாபம்… : எப்படி தெரியுமா?