வவுனியாவில் மேலும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்கள்!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (07.02.2021) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 403 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த 8 பேருக்கும் மன்னாரைச் சேர்ந்த 11 பேருக்கும் கிளிநொச்சியை சேர்ந்த 02 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் வவுனியாவில் 300க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
அதிகரித்து செல்லும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை