காவல்துறை சீருடையை வேறொரு நபருக்கு வழங்கிய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பத்தேகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன் பத்தேகம காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெ.ரோயின் ரக போ.தை.ப்.பொருளுடன் கைது செய்யப்பட்ட குழுவில் உள்ள ஒரு நபரின் முகப்புத்தகத்தை பரீட்சிக்கும் போது அவர் காவல்துறை சீருடையுடன் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குறித்த சீருடையின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை சீருடையை வேறொருவருக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த காவல்துறை அதிகாரி பத்தேகம நீதவான் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.