விமான நிலையத்தில் நபர் ஒருவர் வயகாரா மாத்திரைகளுடன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிகாகோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது, அவர் கையில் கொண்டு சென்ற பையை விமான நிலைய ஊழியர்கள் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது அந்த பையில் அதில் ஏராளமான மாத்திரைகள் இருந்தது.
அதன்பின், உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்பு அவர்கள் வந்து சோதனையிட்டதில் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் இலங்கை மதிப்பிற்கு சுமார் ஒரு கோடி 80 லட்சம் மதிப்புள்ள 3200 வயாகரா மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் வயாகரா மாத்திரைகளை அந்த நபரிடமிருந்து உடனடியாக பறிமுதல் செய்தனர். பின்பு அவரிடம் விசாரணை செய்ததில் போதுமான விபரங்களை அளிக்காமல் இருந்துள்ளார்.
அவர் அளித்த தகவல்கள் ஒவ்வொன்றும் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. முதலில் இது தன் நண்பருக்காக கொண்டு வந்திருப்பதாகவும், அவரின் மருத்துவ தேவைக்காக பயன்படும் என்றும் கூறியுள்ளார்.
இத்தனை வயாகராவை கொண்டு வந்ததற்கு சரியான காரணத்தை இறுதி வரை கூறவில்லை. இதனையடுத்து அந்த மாத்திரைகளை அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.