யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்து!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஏ9 வீதியில் விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து வீதி அருகில் உள்ள தனியார் காணி ஊடாக பயணித்துள்ளது. எனினும் அவ்விபத்தின்போது பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
22 கோடி ஆண்டு பழமையான ‘டைனோசர்’ கால்தடம் கண்டுபிடிப்பு…! யாரு கண்டுபிடிச்சது தெரியுமா?