‘ஒரு நிமிடம் அலைபாயுதே மாதவனாக மாறிய திருடன்’… உடனே பதிலடி கொடுத்த நீதிபதி’… காற்று போன பலூனாக சுருங்கிய திருடனின் முகம்!

நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணைகளில் பல சுவாரசியமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு. ஆனால் தற்போது நடந்துள்ள சம்பவத்தில் திருடன் ஒருவன் பெண் நீதிபதிக்கே ஐஸ் வைத்துள்ளான்.

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த Demetrius Lewis என்ற இளைஞர் வீடு ஒன்றிற்குள் நுழைய முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

அப்போது காணொளி காட்சி மூலமாக நீதிபதி முன்பு Demetrius ஆஜர்படுத்தப்பட்டார். எதிர்முனையில் பெண் நீதிபதி Tabitha Blackmon இந்த வழக்கை விசாரிக்கத் தயாராக இருந்துள்ளார்.

அப்போது விசாரணை ஆரம்பிக்க இருந்த நிலையில், திடீரென குறுக்கிட்ட Demetrius, நீதிபதியைப் பார்த்து, ”மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும்.

நீங்க அவ்வளவு அழகு” என ஐஸ் வைக்க முயன்றுள்ளார். திருடன் சொன்னதைக் கேட்ட நீதிபதி Tabithaக்கு சற்று வெட்கம் வந்த நிலையில், அடுத்ததாகத் திருடன் ”I Love You” எனச் சொல்ல முயன்றான்.

உடனே சுதாரித்துக் கொண்ட நீதிபதி, ”ஓகே மிஸ்டர் Lewis, நீங்கள் ஐஸ் வைப்பது நல்லாவே தெரிகிறது. இதை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள்.

என்னிடம் இதெல்லாம் செல்லாது எனக் காட்டமாகப் பதிலளித்தார். அதோடு Lewis  செய்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத Lewisயின் முகம் காற்று போன பலூனாக சுருங்கிப் போனது. வடிவேலு சொல்வதைப் போல, ”எனது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போனதே” என்ற ரீதியில் திருடனின் நிலை மாறிப்போனது.

தற்போது நீதிபதிக்கும், திருடனுக்கு நடந்த உரையாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் அந்த காணொளியை பார்த்துள்ளார்கள்.

அதே நேரத்தில் அந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த திருடன் சொன்னது உண்மை தான், அந்த நீதிபதி உண்மையிலேயே அழகாகத் தான் இருக்கிறார் என தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் இன்றும் அதிகரித்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை