வவுனியா கனகராஜன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட குழவிசுட்டான் வயல் பகுதியில் மின்சாரத்தில் அகப்பட்டு காட்டு யானையொன்று உ.யிரிழந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குழவிசுட்டான் தெகிழ்பழந்தான் பகுதயில் உள்ள வயல் பகுதியில் யானையின் சடலம் இருப்பதை அவதானித்த கிராம மக்கள் கனகராயன்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவம் , காவல்துறையினர் , வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் வேளாண்மை செய்து வந்திருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைகளுக்காக அழைத்து சென்றிருந்தனர்.
குறித்த ச.டலம் துர்நாற்றம் வீசுவதால் பல நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.