மன்னாரிற்குள் பிரவேசித்த பேரணி!… : அதிகரிக்கும் காவல்துறையின் கெடுபிடி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் கடந்த 3 ஆம் திகதி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பித்து இன்று நான்காவது நாளாக வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றது.

11.30 மணிக்கு மன்னார் பரையநாளன் குளம் வீதியை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மடுவீதியை வந்தடைந்து தற்போது குறித்த ஊர்வலம் மடுவசந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் மன்னாரை சென்றடைந்த பேரணி, மடு நுழைவிடத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் பேரணி வாகனங்களை வழிமறித்து பரிசோதனை மேற்கொள்ளவதோடு, வாகனங்களின் இலக்கங்களும் காவல்துறாயினரால் பதியப்படுகின்றது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
தைப்பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நடந்த அசம்பாவிதம்! பதறிய உரிமையாளர்