திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

திருகோணமலை – கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த நபரொருவருடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உ.யிரிழந்துள்ளார்.


இவ் விபத்துச் சம்பவம் நேற்று (5) மாலை இடம் பெற்றுள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அக்போபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த சேனக்க திஸாநாயக்க 43 வயதுடைய வாய்பேச முடியாத ஒருவரே இவ்வாறு வி.பத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உ.யிரிழந்தவரின் ச.டலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பி.ரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பான வி.சாரணைகளை கந்தளாய் தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாடசாலை மா.ண.வி.யி.ன் ச.ட.ல.ம் மீ.ட்பு!