கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பிலினேல் என்கிற கிராமத்தில் சிறுத்தை ஒன்று நாயை துரத்திய போது அந்த நாய் ரெகப்பா என்பவரது வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது.
நாயை தொடர்ந்து சிறுத்தையும் கழிவறைக்குள் புகுந்தது. சிறுத்தை கழிவறைக்குள் நுழைந்ததை பார்த்ததும் அந்த வீட்டுப் பெண் உடனடியாக அலறி உள்ளார்.
மேலும் கழிவறையின் கதவை பூட்டி பக்கத்து வீட்டுக்காரர்களை உதவி அழைக்க அனைவரும் சேர்ந்து காவல்துறை அதிகாரிக்கும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கழிவறையில் நாயும் சிறுத்தையும் இருந்தது காணொளியாக சமூக வலைதளத்தில் வைரலானது. இதனிடையே வனத்துறை சரகர் கரிகாலன் இது பற்றி பேசும்போது,
கழிப்பறைக்கு வெளியே ஒரு கூண்டு வைக்கப்பட்டு அதனைச் சுற்றி ஒரு வளையம் அமைக்கப்பட்டு சிறுத்தையை மீட்டதாகவும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுத்தை வெளியே வந்து அந்த கூண்டில் சிக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
This photo was taken from outside through a gap in the window. It is a leopard and a dog stuck together since this morning inside the toilet of a house in Kadaba, Dakshina Kannada district. I am told the leopard escaped at 2 pm and the dog is alive! pic.twitter.com/hgjJhaXW03
— Prajwal (@prajwalmanipal) February 3, 2021
சிறுத்தை வெளியே வந்த சில நிமிடங்களிலேயே நாய் வெளிவந்தது. கிட்டத்தட்ட ஏழு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நாயையும் சிறுத்தையும் வெளியே எடுத்து இருக்கிறார்கள்.
வனப் பகுதியில் சுற்றித்திரிந்த நாயை துரத்திய சிறுத்தை, நாய் எங்கு சென்றாலும் விடாமல் துரத்தி இருக்கிறது.
A plan was hatched to trap the tiger in a net from the top of the toilet. But the leopard proved to be too strong, broke free and ran away. pic.twitter.com/ZFZgtDWkH0
— Prajwal (@prajwalmanipal) February 3, 2021
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த நாய் கழிவறைக்குள் நுழைய, சிறுத்தையும் நாயை தொடர்ந்து உள்ளே நுழைந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் 7 மணி நேரமாக ஒரே அறைக்குள் இருந்த நாயை, சிறுத்தை கொ.ல்லவில்லை.
மீட்பு நடவடிக்கையின் போது இரண்டு பிராணிகளுக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. சிறுத்தை மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.