திருமணமான 15 நாளில் தனியாக வெளிநாட்டுக்கு சென்ற கணவன் : மனைவிக்கு காத்திருந்த சோதனை!

திருமணமான 15 நாட்களில் மனைவியை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன் உள்ளூர் காவல்துறையினர் மூலம் சொந்த ஊருக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானாவின் நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் பிந்துஸ்ரீ என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாளில் சுரேஷ் அவுஸ்திரேலியாவுக்கு தனது பணிக்காக சென்றுவிட்டார்.

விரைவில் மனைவி பிந்துஸ்ரீயை தன்னிடம் அழைத்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆனால் இதன் பின்னர் பிந்துஸ்ரீயை அவர் தொடர்பு கொள்ளவில்லை. இதனிடையில் பிந்துஸ்ரீயை சுரேஷின் பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொ.டுமைப்படுத்தி வந்தனர்.

இதனால் வே.தனையயும் அ.திர்ச்சியும் அடைந்த பிந்துஸ்ரீ அவர்களுக்கு அஞ்சாமல் துணிச்சலுடன் காவல் நிலையத்தில்  தனது கணவர் சுரேஷ் மற்றும் மாமனார், மாமியார் மீது புகாரளித்தார். இதை தொடர்ந்து வெளிநாட்டில் உள்ள சுரேஷை சொந்த ஊருக்கு வரவழைக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினார்கள்.

அதன்படி அவுஸ்திரேலியாவில் சுரேஷ் பணிபுரியும் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு காவல்துறையினர் அனைத்து தகவல்களையும் தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷை அவர் பணியில் இருந்து நீக்கினார்.

பின்னர் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் சுரேஷ் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வடமாகணத்தில் இன்று திறந்து வைக்கபட்ட அரசாங்கத்தின் விசாலமான  காற்றாலை எந்த மாவட்டம் தெரியுமா?