வவுனியா சிறைச்சாலையில் இருந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட கைதி!

நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார்.

73 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 146 சிறைக்கைதிகள் இன்று (04.02.2021) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளில் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவு செய்தவர்களும்,

50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களும், சிறார் குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்தும் கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரி என்.பிரபாகரன் தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைலாகு கொடுத்து குறித்த கைதியை விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டே விடுதலை செய்யப்பட்டார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கொவிட்-19 தடுப்பூசி போடுவது பற்றி நாளை ஒத்திகை!