என் ‘கல்யாண ஆடையை நீ பாத்தது இல்லை தானே’… மகளுக்கு காட்ட 14 வருசம் கழிச்சு பெட்டியை திறந்த தாய்.. காத்திருந்த அதிர்ச்சி..!

14 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய திருமண உடையை மகளுக்கு காட்டுவதற்காக பெட்டியை திறந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அமெரிக்காவின் மின்னசோடா மாகாணத்தைச் சேர்ந்தவர் வெண்டீ டைலர் (Wendie Taylor). இவர் தனது 12 வயது மகளுடன் அமர்ந்து Gilmore Girls என்ற அமெரிக்க சீரியலை பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திருமண உடை குறித்து ஒரு காட்சியில் நடிகை பகிர்ந்துள்ளார். அதை பார்த்ததும் உடனே தனது மகளிடம் தன் திருமண உடையைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

இதனால் மகள் அதை பார்க்கவேண்டும் என்று ஆசையாகக் கேட்டதால், 14 வருடங்களுக்கு முன்பு பெட்டியில் வைத்த உடையை மீண்டும் வெளியே எடுக்க திறந்துள்ளார்.

ஆனால் உடையை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனென்றால் அந்த பெட்டியில் தன்னுடைய திருமண உடைக்கு பதிலாக வேறொரு உடை இருந்ததால் வெண்டீ டைலர் சோகமடைந்துள்ளார்.

இதனை அடுத்து திருமண ஒருங்கிணைப்பாளர்களிடம் தனது திருமண உடையை எங்கு மாற்றினார்கள் என்பதை சோதித்துப்பார்த்து கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் வைத்ததுள்ளார்.

மேலும் தனது திருமண புகைப்படம் மற்றும் அந்த பெட்டியில் இருந்த உடையின் புகைப்படத்தை முகப்பத்தகத்தில் பகிர்ந்து, தன்னுடைய உடையை கண்டுபிடித்து தருமாறும், தன்னிடம் உள்ள உடையை உரியவரிடம் சேர்க்க உதவுமாறும் வெண்டீ டைலர் கோரிக்கை வைத்துள்ளார்.

14 வருடங்களுக்குப் பிறகு திருமண உடையை கண்டுபிடித்து தருமாறு பதிவிட்ட பெண்ணின் முக்ப்புத்தக பதிவுக்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு!