இன்று வெற்றிகரமாக முடிவடைந்த போராட்டம்… நாளைய தினமும்… – போராட்டக்காரர்கள் அறிவிப்பு!

பொத்துவில்லில் இருந்து பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று காலை கொட்டும் மழைக்கு மத்தியில் ஆரம்பமாகியது.

இதில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். மதத் தலைவர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப் படுத்திய மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த காவல் நிலையங்கள் ஊடாக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளுக்கும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் நீதிமன்றத் தடை உத்தரவு காவல்துறையினர் மூலம் வழங்கப்பட்டிருந்தன.

இவ்வாறு காவல்துறையினர் உத்தரவையும் தாண்டி புதன்கிழமை இப்போராட்டம் மிகவும் வெற்றிகரமாக மட்டக்களப்பு தாழங்குடாவில் புதன்கிழமை மாலை நிறவு பெற்றதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை காலை அவ்விடத்திலிருந்து மீண்டும் பொலிகண்டி நோக்கி புறப்படவுள்ளது.

இந்நிலையில தமிழ் மக்களின் இப்போராட்டத்தில் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும், முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டு வலுச்சேத்திருந்தனர்.

போத்துவில் இருந்து மட்டக்களப்பு வரையில் பிரதான நெடுஞ்சாலையூடாக வந்த இப்பேரணியையடுத்து வீதியில் காவல்துறையினர், இராணுவதினர், மற்றும் விசேட அதிரடிப்படையினரும், புலனாய்வுத் துறையினரும், தமது கடமையினை முடுக்குவிடப்பட்டிருந்ததையும் அவமதானிக்க முடிந்தது.

அரசியல் கைத்திகளின் விடுதலை, காணிவிடுவிப்பு, அத்துமீறிய குயேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, காணி ஆக்கிரமிப்பு, பண்ணையாளர்களைக் கடத்துதல், உள்ளிட்ட பல விடையங்களுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டியே தாம் அகிம்சை ரீதியில் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரைக்குமான போராட்டம் இடம்பெறுவதாக இதில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இலங்கையில் இன்று கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை வெளியானது!