இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு கடுமையான உடற் தகுதி பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை அணியின் அநேக வீரர்கள் உடல் தகுதியின்மையினால் களத்தில் சிறந்த முறையில் ஜொலிக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியை தெரிவு செய்யும் போது கடுமையான உடல் தகுதி பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.
35 பேரைக் கொண்ட குழாமொன்றிலிருந்து வீரர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இந்த அனைத்து வீரர்களும் 8 நிமிடங்கள் 35 செக்கன்களில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தை கடக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உடல் தகுதியை நிரூபிக்கத் தவறும் வீரர்கள் போட்டித் தொடருக்கான அணியில் இடம்பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அணியின் உடல் தகுதி பயிற்றுவிப்பாளர் க்ரான்ட் லுடனினால் இரண்டு கிலோ மீற்றர் ஒட்டம் என்ற இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அணியில் அங்கம் வகிக்கும் சில சிரேஸ்ட வீரர்கள், முன்னாள் தலைவர்கள் இந்த உடல் தகுதி பரிசோதனையை பூர்த்தி செய்யக் கூடிய உடல் தகுதியில் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 5ம் திகதி இந்த உடல் தகுதி பரிசோதனை சுகததாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.