வெலிக்கடை – ராஜகிரிய பகுதியில் 300 கிராம் ஹெ.ரோயின் போ.தைப்பொருள் மற்றும் 11 இலட்சம் ரூபாய் பணத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் சென்று கொண்டிருந்த காரை சோதனைக்குட்படுத்தியுள்ள காவல்துறை விசேட அதிரடிப்படையினர், அதிலிருந்து 300 கிராம் ஹெ.ரோயின் போதைப் பொருள் மற்றும் 11 இலட்சம் ரூபாய் தொகை பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் போ.தைப் பொருள் கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரியவந்துள்ளதுடன், இவர்களுடன் இணைந்து போ.தை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், காவல்துறையினர் இன்றைய தினம் சந்தேக நபர்களிருவரையும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு உத்தரவு பெற்றுக் கொள்ளவும் எதிர்ப்பார்த்துள்ளனர்.