கனடாவின் விட்பி பகுதியில் இலங்கைத் தமிழர் கைது!

சிறுவர் ஆ.பாசக் கு.ற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள Whitby பகுதியை சேர்ந்த தமிழ் நபர் ஒருவர் கைதாகியுள்ளார் என டர்ஹாம் காவல்துறையினரை மேற்கோள்காட்டி கனடா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறு வயதுடைய பிள்ளைகளின் ஆ.பாசமான படங்களை செயலிகளின் தொழில்நுட்பம் மூலம் தரவிறக்கம் செய்த தமிழ் நபர் ஒருவரை கனடா காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். 33 வயதான கார்த்திக் மணிமாறன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கு.ற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர் 2020ம் ஆண்டு Snapchat, TikTok, Omegle, Likee and KIK Messenger உள்ளிட்ட பல ஒன்லைன் தளங்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Dirtyboy, Dirtyboui, Daddy Dirty, Virus Redbeast, Rock Shan Rock எனும் பல பெயர்களில் அவர் இந்த தளங்களை பயன்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

National Child Exploitation Crime Centre ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபருக்கு எதிராக மேலதிக தகவல்களை வழங்க விரும்புபவர்கள் 1-888-579-1520 என்ற பொலிஸ் இலக்கம் அல்லது 1-800-222-8477 என்ற குற்றத்தடுப்பு பிரிவிற்கு தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
மன்னாரில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பம்