போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் : குழந்தைகளின் நிலை என்ன?

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைசர் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாடு தழுவிய அளவில் ஞாயிறு அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்குப் பதில் தவறுதலாக சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி கொடுத்துள்ளனர்.

ஒரு குழந்தை வாந்தி எடுக்க, உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. பரிசோதித்தபோது கிருமி நாசினி வழங்கப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக சுகாதார ஊழியர்கள் 3 பேர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கடற்பரப்பில் உயிரிழந்த இலங்கைத் தமிழன் : நிர்க்கதியாகியுள்ள மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை!