‘அதிர்ஷ்டம் கதவ மட்டும் தட்டல… இவருக்கு வீட்டுக்குள்ளயே வந்து சலங்கை கட்டி ஆடுது!’ – அடுத்தடுத்து 6 முறை ‘அதிர்ஷட மனிதனுக்கு’ நடந்த ‘அற்புதம்!’

ஒருவரின் வாழ்க்கையை உச்சத்துக்கு கொண்டு செல்லும் சக்தி அதிர்ஷ்டத்துக்கு மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் ஒரு முறையாவது தங்களது வாழ்க்கையில் நேராதா என்று ஏங்கும் மனிதர்கள் பலர்.

இதையே இன்னொரு விதமாக ‘அதிர்ஷ்டம் ஒருமுறை தான்’ கதவைத் தட்டும் என்றும் பலர் கூறுவதுண்டு. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்ந்து 6 முறை அதிர்ஷ்டம் அடுத்தடுத்து அடித்துக் கொண்டே இருக்கும் தரமான சம்பவம் நடந்தேறியுள்ளது.

ஆம், அமெரிக்காவின் மெரிடியனைச் சேர்ந்த பிரையன் மோஸ் (Bryan Moss) என்பவருக்கு தான் இப்படி 6வது முறையாக லொட்டரியில் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு 4.80 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

இதை அறிந்த இணையவாசிகள் பலரும் இவரை அதிர்ஷ்டத்தின் அண்டை வீட்டுக் காரர் என்று தொடங்கி ஏகபோகமாக புகழ்ந்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் பார்வையிழந்த நிலையிலும் இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கையில் வெற்றிகண்ட விவசாயி!