யாழில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் வவுனியாவில் கைது      

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று (15.12.2020) முன்னெடுக்கப்பட்டது.

 

கடந்த புரட்டாசி மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் வைத்து தனுரொக் என்ற மானிப்பாய் இளைஞனை வாளால் வெட்டி கொலை முயற்சி செய்தமை, நீர்வேலியில் உள்ள தனுரொக்கின் நண்பனின் வீடு புகுந்து இளைஞனையும் தாயாரையும் தாக்கியமை கச்சேரியில் ஊழியர் ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல வாள்வெட்டு வன்முறைகளுடன் பிரதான சந்தேக நபராக சுமன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

பணத்துக்காக வாள்வெட்டு வன்முறைகளின் தான் ஈடுபட்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரால் யாழ்ப்பாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில் ஓமந்தையில் தலைமறைவாகியிருந்தமை தொலைபேசி உரையாடலின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார். அவர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வவுனியாவில் ஹெரோயின் விற்பனை செய்த நபர் கைது… நகரத்தில் குழப்பம்