யாழில் குடும்பப் பெண்ணொருவரை காணவில்லையென ஒருமாத காலமாக தேடும் குடும்பம்!

யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த 27/12/2020 இலிருந்து காணாமல் பொயுள்ளதாக குடும்பத்தினரால் பருத்தித்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு, சிறிலாங்கா பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள கரித்தாஸ் முகாம் குடியிருப்பில் வசித்து வந்த வலித்தூண்டல் பகுதியை சேர்ந்த நிரூபன் கவிப்பிரியா எனும் 20 வயதுடைய இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு அயலில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற நிலையில் அங்கும் சென்றிருக்கவில்லை என்பதை அறிந்து அன்று இரவு 10.00 மணியளவில் குடும்பத்தாரால் பருத்தித்துறை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணமாகி ஏழு மாதமான நிலையில் இவ்வாறு காணாமல் போயிருந்த குறித்த பெண் காணாமல் போயிருந்த நாளிலிருந்து ஐந்து நாட்களின் பின்னர் தான் நீர்கொழும்பிலுள்ள காமன்ஸ் ஒன்றில் பணியாற்றுவதாக தெரிவித்திருந்த மறுநாளிலிருந்து அதவது 06/01/2021 இலிருந்து தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

தனது மகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமது தொலைபேசி இலக்கங்களுக்கு 0768498916, 0765547447 தகவல்த தருமாறு குறித்த பெண்ணின் தந்தை அந்தோனிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொவிட்-19 நோயாளி தப்பியோட்டம்