கல்யாணத்துக்கு வந்த ‘முன்னாள்’ காதலன்!… சட்டென புது மாப்பிள்ளையிடம் மணப்பெண் வைத்த கோரிக்கை… ஒரு நிமிடம் அமைதியான திருமண வீடு… வைரல் காணொளி!

பொதுவாக, திருமண நிகழ்ச்சிகளில் நடைபெறும் நிகழ்வுகள் ஏதேனும் உலகளவில் வைரலாகக் கூடும். அது நெகிழ்ச்சியாகவோ, அல்லது நகைச்சுவையுடன் கூடியதாகவோ இருக்கலாம்.

 

அப்படி ஒரு நிகழ்வு தான் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ள திருமணத்தில் அரங்கேறியுள்ளது. புதுமண தம்பதிகளை வாழ்த்த வேண்டி, மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார்.

தனது முன்னாள் காதலியை வாழ்த்த மேடைக்கு வந்த காதலர், மணப்பெண் கைகுலுக்க வந்த போது அதனை தவிர்த்துள்ளார்.

அப்போது, தனது முன்னாள் காதலனை கட்டிப் பிடிக்க வேண்டி, கணவரிடம் புதுமணப்பெண் அனுமதி கேட்டுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, மணமகனும் சம்மதிக்க, முன்னாள் காதலனை மணமேடையில் வைத்து கட்டிப் பிடித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்றை, மணப்பெண் டிக் டாக் காணொளியாக தனது டிக் டாக் பக்கத்தில் (Account) வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்த போதே, பலர் பல விதமான கருத்தை இந்த நிகழ்வுக்கு தெரிவித்தனர். ஒருவர் தனது முன்னாள் காதலருடன் நல்லுறவு கொள்வதில் தவறில்லை என்ற நிலையில், ‘மணமகனுக்கு இதை விட சிறந்த பெண் கிடைப்பதே சிறந்தது’ என்றும், ‘இது கணவருக்கு மதிப்பு கொடுக்காத செயலாகும்’ என விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், மேலும் சிலர், ‘அவர் தனது கணவரின் அனுமதியுடன் தான் இதைச் செய்தார். இதில் என்ன தவறு இருக்கிறது’ என பெண்ணிற்கு ஆதரவாக கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
விமான சக்கரத்தில்… – 60 டிகிரி உறைநிலையில் தொங்கியபடி பயணம்!’.. அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி, கோமாவில் இருந்தவருக்கு ‘பிரிட்டனில்’ நடந்த மகிழ்ச்சி செய்தி!