காணொளி: ‘ரொம்ப நல்லா இருக்கு’!… பிரபல தமிழ் யூடியூப் சேனலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ராகுல்காந்தி… ‘செம’ வைரல்…!

பிரபல யூடியூப் சமையல் குழுவினருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சமையல் குழுவினர், தமிழக கிராமத்து பாரம்பரியப்படி உணவு சமைத்து வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற பெயரில் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இந்த பாரம்பரிய சமையலால் பல பார்வையாளர்களை அவர்கள் கவர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினரை நேரில் சென்று சந்தித்தார். அப்போது காளான் பிரியாணி தயார் செய்து கொண்டிருந்த குழுவினருடன் ராகுல் காந்தியும் இணைந்தார்.

தங்களது சமையல் கலையை உலகமெங்கும் எடுத்துச் சென்று சமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்த குழுவினரிடம், சிகாகோவில் உள்ள தனது நண்பர் மூலம் உதவுவதாக ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

பின்னர் அவர்களுடன் ஒன்றாக ஓலைப்பாயில் அமர்ந்து காளான் பிரியாணியை ராகுல் காந்தி சாப்பிட்டார். அவர்களிடமிருந்து விடை பெறுவதற்கு முன்னர், அடுத்த முறை வரும்போது தனக்கு ஈசல் சமைத்து தரூவீர்களா? என உரிமையுடன் கேட்டார். ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை ஜோதிமணி எம்.பி தமிழில் மொழிப் பெயர்த்து கூறினார்.

இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட 1 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக வில்லேஜ் குக்கிங் சேனலை நடத்தி வரும் சமையல் குழுவினர், தாங்கள் சமைக்கும் உணவுகளை அருகில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
கணவன் உயிரிழந்த ஏழு தினங்களில் மனைவி உயிரிழப்பு! : மட்டக்களப்பில் ஏற்பட்ட சோகம்