யாழில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சமய வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தரக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நாடப்பட்டுள்ளது.

தையிட்டி பெண்கள் காவலரனுக்கு அருகாமையில் இந்த விகாரை தனியார் காணியில் அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் இடம்பெற்றுள்ளன.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் அதிகரிக்கும் வாகன விபத்து… கடந்த பத்து  நாளில் இவ்வளவு மரணமா…!