இலங்கையில் இன்று முதல் கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி ஆரம்பிக்கப்பட்டன.
அந்த வகையில் இன்று 2,280 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தகவலை வைத்தியர் சுதத் சமரவீர மற்றும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொரோனா தடுப்பூசிகள் ஆறு வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்றது.
முதலாவதுடோஸ் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தின் மருத்துவ நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு ஏற்றப்பட்டது.
சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு முதல் கட்டத்தில் இந்த தடுப்பூசிகளை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.