மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தா.க்.கி உ.யி.ரிழந்த நிலையில் இரண்டு ச.டலங்களை இன்று (29.01.2021) வெள்ளிக்கிழமை காலை காவல்துறையினர் மீ.ட்டுள்ளனர்.
இவ்வாறு ச.டலமாக மீட்கப்பட்டவர்கள் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மூக்கையா மகேந்திரன் (வயது-45) மற்றும் வேட்டையார் முறிப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை தேவசங்கர் (வயது-37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து சட்ட வி.ரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்று வீதிக்கு சற்று தொலைவில் காட்டு விலங்குகளை வே.ட்டையாடுவதற்காக அமைத்த மின் இணைப்பில் சிக்கியே குறித்த இருவரும் உ.யிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த இருவரும் மின்சாரம் தா.க்.கி உ.யி.ரிழந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பிரதேச வாசிகள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டிக்கப்பட்டு, ச.டலம் மீட்கப்பட்டது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரனைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.