புதிய இனம் மீன் என நினைத்து மீன் சந்தைக்கு பாம்பை கொண்டு சென்ற நபர்!

புதிய இனம் மீன் என நினைத்து மீன் சந்தைக்கு ஒருவர் கடல் பாம்பு ஒன்றை கொண்டு சென்ற சம்பவமொன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே அவர் இந்த கடல் பாம்பை குறித்த நபர் கொண்டு சென்றுள்ளார்.

அத்தோடு தான் மீன் பிடிக்கும்போது தனது வலையில் சிக்கியது புதுவகை மீனாக இருக்குமோ எனும் சந்தேகத்தில் அதனை காண்பிப்பதற்காக மீனவர் விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் அதனை பார்வையிட்ட ஏனைய மீனவர்கள் அது கடலில் உள்ள அஞ்சாலை எனும் வகை பாம்பு என கூறியுள்ளனர்

மேலும் குறித்த கடல் பாம்பு 7 அடி உயரமும் 8 கிலோ எடையும் கொண்டது எனவும் கூறப்படுகின்றது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு