வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களினால் மழைக்கு மத்தியிலும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இன்று (2021.01.29 ) காலை 10.45 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வேலணை பிரதேச செயலாளருக்கு வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலராக இடமாற்றம் செய்யப்பட்டு வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் வேலணை பிரதேச செயலாளராக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே எமது பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை உடன் நிறுத்து, யாருக்கு இலாபமீட்ட இந்த இடமாற்றம், மாற்றாதே மாற்றாதே எமது பிரதேச செயலாளரை மாற்றாதே, எமது பிரதேச செயலாளர் எமக்கு வேண்டும்,

தேவை தேவை எமது பிரதேச செயலாளரே எமக்கு தேவை போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்ட நிறைவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலாளரின் இடமாற்றம் இரத்துச்செய்யும் மகஐரை போராட்ட இடத்திற்கு வருகை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
மன்னாரிற்குள் பிரவேசித்த பேரணி!… : அதிகரிக்கும் காவல்துறையின் கெடுபிடி!