இலங்கையில் முதலாவது கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இந்தியாவில் இருந்து நேற்றை தினம் கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் சற்று முன்னர் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி முதலாவது தடுப்பூசி டொஸ்கள் வைத்தியசாலையில் படையினருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை இன்று தொடக்கம் ஆறு வைத்தியச சாலைகளில் வழங்கப்படுகின்றது.

சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு முதல் கட்டத்தில் இந்த தடுப்பூசிகளை வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
சிறுவனுக்கு எமனான ஊஞ்சல்!… பரிதாபமாக பலி!