புதிய வகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மஹரகம பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான போ.தைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கை.து செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம காவற்துறை பிரிவுக்குட்பட்ட எரெவ்வல பகுதியில் நேற்று மாலை திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பன்னிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கை.து செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து ஒரு கிலோ ஐந்து கிராம் டெட்ரா ஹைட்ரோ கெனபினோல் எனப்படும் ஏஷ் ஒயில் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இந்த போதைப்பொருட்களை ஏற்றி வந்த காரை பறிமுதல் செய்துள்ள திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபர் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
இரவு இடம்பெற்ற கோர விபத்து – இரு இளைஞர்கள் உ.யிரிழப்பு!