இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மாசி மாதம் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரையில் சகல அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் மற்றும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
73 ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.