சூர்யா – பாண்டிராஜ் இணையும் #Suriya40.. இந்த சென்சேஷன் நடிகைதான் கதாநாயகி!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஹீரோயின் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப் போற்று சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இத்திரைப்படம் தற்போது ஆஸ்கர் ரேஸிலும் இடம்பெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில்  நடிக்கிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இத்திரைப்படம் Suriya 40 என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ள பதிவில், நடிகை ப்ரியங்கா மோகன் இப்படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபலமான இவர், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
வடமாகணத்தில் வவுனியாவில் தான் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகம்! : எத்தனை பேர் தெரியுமா?