காணொளி: காணொளி ஓடிட்டு இருக்கு, கையில் ட்ரிமரோடு நின்ற தாய்’… ‘கண்ண மூடி திறக்குறதுக்குள்ள தாய் செய்த செயல்… மில்லியன் இதயங்களை தொட்ட நெகிழ்ச்சி காணொளி…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது தாய் செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

பொதுவாகவே புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோ தெரபி, கதிர்வீச்சு போன்ற கடுமையான சிகிச்சைகள் வழங்கப்படும்.

இதன் காரணமாக, அவர்களுக்கு உடலில் எல்லா பகுதியிலும் முடிகள் கொட்டும்.

இதனால், ஒரு கட்டத்தில் அவர்கள் தலையை முழுவதுமாகக் மொட்டையடிக்க வேண்டியிருக்கும்.

அது நோயினால் ஏற்பட்ட துன்பத்தை விட, அவர்களுக்கு பல மடங்கு மன உளைச்சலையும் வேதனையும் கொடுக்கும். இப்படி ஒரு நிலையில், அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கத்தையும் அளிக்கமுடியும்.

இவ்வாறு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நேர்மறையான ஆற்றலையும் நம்பிக்கையையும் கொடுக்கும், ஒரு கண்கலங்கவைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியில் ஒரு தாய், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகளுக்கு மொட்டை அடித்துக்கொண்டு இருக்கிறார். இருவரும் மகிழ்ச்சியுடன் அதனை பதிவு செய்துகொண்டிருக்கின்றனர்.

அப்போது, தன் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சற்றும் தயங்காமல் தனது தலையையும் மொட்டையடிக்கத் தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் கண்கலங்கிய நிலையில் நின்ற இந்த காணொளி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

ட்விட்டரில் இந்த வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஒரு அலுவலகத்தில் சக ஊழியரின் பற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு மொட்டையடிக்கும்பொது, அவருடன் பணியாற்றும் அனைத்து சகாக்களும் மொட்டையடித்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சி அடையச் செய்தது. இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.

அவை அனைத்தும் நோய்க்கு எதிராகப் போராடும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையை கூட்டுகின்றன.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!