இலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி!

முகப்புத்தத்தில் இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதனால் இலங்கை முகப்புத்தக இரத்த தான அம்சத்தை பெற்ற 29 வது நாடாக பதிவானது.

மேலும் நாடு முழுவதும் இருபத்தி நான்கு இரத்த வங்கிகள் முகப்புத்தக சிறப்பு அம்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு 18-55 வயதுக்குட்பட்ட முகப்புத்தக பயனர்கள் அருகிலுள்ள இரத்த வங்கிகள் அல்லது மருத்துவமனைகளில் பதிவுசெய்து இரத்தத் தேவைகள் குறித்த புதுப்பிப்புகளைப் பெறலாம்.

மேலும் இரத்த தானம் செய்ய அதிகமானவர்களை ஊக்குவிப்பதற்கும், இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் சிறப்பு முகப்புத்தக இரத்த தான அம்சம் தொடங்கப்பட்டுள்ளது.

எனினும் இரத்தம் தேவைப்படுவோர்க்கு மட்டுமின்றி இரத்தம் வழங்குவோரை சுலபமாக தொடர்பு கொள்ள முகப்புத்தக கருவிகள் (Tools) உதவியாய் இருக்கும்.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

More Stories
‘செயற்கை சூரியன்’ என்று அழைக்கப்படும் அதிநவீன அணுஉலையை வெற்றிகரமாக இயக்கிய நாடு